Monday, February 18, 2008

அதிதுல்லிய டிவிடி: தோஷிபா நிறுத்த முடிவு?

அதிதுல்லிய டிவிடி: தோஷிபா நிறுத்த முடிவு?
மின்னணு பொருள் தயாரிப்பில் சிறந்து விளங்கி வரும் ஜப்பான் நிறுவனமான தோஷிபா, தனது அதிதுல்லிய டிவிடி உற்பத்தியை விரைவில் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனமான சோனி, அடுத்த தலைமுறை தொழில்நுட்பமான புளு-ரே டிஸ்க் (Blu-Ray) தயாரிப்பில் இறங்கியதை தொடர்ந்து, தோஷிபாவும் அந்த வகை டிஸ்க்குகளை தயாரிக்க முடிவு செய்துள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், தனது கடைகளில், அதிதுல்லிய டிவிடிக்கள் (High Definition DVD) இனி விற்பனை செய்யப்படாது என தெரிவித்து உள்ளதை தொடர்ந்து, தோஷிபா நிறுவனம் இந்த திடீர் முடிவை எடுத்ததாகவும் சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிளேயர் மற்றும் டிஸ்க் துறையில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதில், கடந்த 1980 முதல் சோனி, தோஷிபா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.


புளு-டிஸ்க் தயாரிப்பில் சோனி சமீபத்தில் இறங்கியுள்ளதை தொடர்ந்து, தோஷிபாவும் அந்த வகை டிஸ்க் தயாரிப்பில் இறங்க உள்ளது. இது இரு நிறுவனங்களுக்கு இடையேயான தொழில் போட்டியை மேலும் அதிகரிக்கும் என இத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.

புளு-டிஸ்க் ஒரு கண்ணோட்டம்: முதலில் சிடி எனப்படும் காம்பேக்ட் டிஸ்ட் (Compact Disc) தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அதை விட மேம்படுத்தப்பட்ட டிவிடி எனப்படும் டிஜிட்டல் வெர்சடைல் டிஸ்க் (Digital Versatile Disc) அறிமுகமானது.

அதிதுல்லியமாக திரைப்படங்களை கண்டுகளிக்க டிவிடி தொழில்நுட்பத்தை சிறிது மேம்படுத்து அதிதுல்லிய டிவிடி சந்தைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இதை விட அதிக தகவல்களை சேமித்து வைக்க கூடிய புளு-ரே டிஸ்க் மேலை நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
நன்றி :http://tamil.in.msn.com/infotech/news