Tuesday, May 27, 2008

கணினி தொடர்பான கேள்வி பதில்கள்

அட்டாளைச் சேனையில் இருந்து அஸ்ரப் சூரியன் அவர்கள் கேட்ட கணினித் தொடர்பான சந்தேகங்களுக்கான பதில்கள். இவரின் வலைப்பூ
www.athirupthikal.blogspot.com

கேள்வி 01 :கணணியை format பண்ணினன்..அதுல NTFS, FAT-32 இப்படியானவார்த்தைகள் தோன்றிச்சு...நானும் என்கயோ கண்ட நினப்பில NTFS என்றவார்த்தைய சொடுக்கி விட்டன்...அப்பிடி என்டா என்ன? அதுட முக்கியத்துவம்என்ன?

NTFS, Fat-32, இவையெல்லாம் File Systemங்கள். எவ்வாறு மனித இனத்தில் ஒவ்வொரு இனத்தவரும் தங்களுக்கென்று தனித்தன்மையான கலாச்சாரக் கோட்பாடுகளை வைத்திருக்கின்றார்களோ அதுபோல ஒவ்வொரு இயங்குதளங்களும் (Operating System) தமக்கென்று தனித்தனியாகவோ அல்லது பொதுவானதாகவோ பைல் சிஸ்ரங்களை வைத்திருக்கின்றன.
உதாரணமாக NTFS பைல் சிஸ்ரத்தில் DOS, Windows 95, 98(First Edition) ஆகியவை வேலை செய்யாது. அதே நேரத்தில் 32GBகளுக்கு மேல் கொள்ளவு உடைய Harddiskகளை FAT, FAT32 ஆகியவை ஆதரிக்காது. மேலும் NTFSல் கணினி ஹார்ட் டிஸ்கின் இடத்தை வீனடிக்காமலும், Security settingsகளை கொடுப்பதற்கும் ஏதுவாக அமையும். இன்று அனைவராலும் Windows Familiesல் விரும்பப்படும் பைல் சிஸ்ரம் இதுவாகும்.

கேள்வி 02 :Flash memory ஒன்றை format செய்யும் போது அதன் draiver அழிந்து போய்விடுமா? flash memory சில நேரம் stop ஆகுதில்ல.. ஏதோ errormessage வருகுது? cant stop generic volume இந்த மாதிரியாக....

Flash Memoryஐ Format செய்வதால் அதனுள் இருக்கும் டேட்டா அனைதத்தும் அழிந்து விடும். சில பிளாஸ் மெமரிகளில் லொக் செய்வதற்கான யுடிலிட்டி சொப்ட்வெயர்கள் போட்டு இருப்பார்கள். அவைகளும் அழிந்து விடும். அதனால் உங்கள் பென் ரைவ்விற்கு எந்த பாதிப்பும் இல்லை.

"cant stop generic volume" என்ற பிழைச் செய்தி வருவதற்கான காரணம் பெரும்பாலும் உங்கள் கணினியில் வைரஸ் இருக்கலாம். அல்லது அந்த பிளாஸ் ரைவில் உள்ள ஏதாவது ஒரு பைலை நீங்கள் ஓப்பன் செய்திருக்கலாம்.

கேள்வி 03- எனது கணணியில் இருக்கும் modem இயங்குதா என்டு எப்பிடி பாக்கலாம்?.....எவ்வாறு மொடத்தினை install செய்வது?
மொடம் இரண்டு வகைப்படும். ஒன்று Internal இது கணினியின் மதர்போட்டில் உள்ள சிலட்டில் இணைக்க வேண்டும். மற்றது External இது கணினியின் பி்ன்புறமுள்ள COM / USB Port ல் இணைக்கலாம்.

அதற்கான ரைவரை இன்டால் செய்யலாம். பெரும்பாலான மொடங்கள் வின்டோஸ் xpயில் தானாக ரைவரை நிறுவி விடும். இதை சரிபார்க்க
START--> control Panel--> Phone and Modem என்ற பகுதிக்குச் சென்று.
அதில் Modem என்ற பகுதியில் பார்த்தீர்களானால் அதில் மொடத்தின் நிறுவப்பட்டுள்ள மொடத்தின் பெயர் தெரியும்.

அவ் மொடம் சரியாக இயங்குகின்றதா என்று சரிபார்க்க, அதிலுள்ள Properties என்ற பட்டினை கிளிக் செய்யவும். அதில் உள்ள diagnostics என்ற பகுதியில் Query Modem என்ற பட்டினை கிளிக் செய்தால் Modem Information என்ற பகுதியில் உங்கள் மொடத்தினைப் பற்றிய தகவல்கள் தெரியும். உங்கள் மொடம் வேலை செய்யவில்லை என்றால் பிழைச் செய்தி ஒரு dialog boxல் தெரியும்.