Tuesday, May 27, 2008

கணினி தொடர்பான கேள்வி பதில்கள்

அட்டாளைச் சேனையில் இருந்து அஸ்ரப் சூரியன் அவர்கள் கேட்ட கணினித் தொடர்பான சந்தேகங்களுக்கான பதில்கள். இவரின் வலைப்பூ
www.athirupthikal.blogspot.com

கேள்வி 01 :கணணியை format பண்ணினன்..அதுல NTFS, FAT-32 இப்படியானவார்த்தைகள் தோன்றிச்சு...நானும் என்கயோ கண்ட நினப்பில NTFS என்றவார்த்தைய சொடுக்கி விட்டன்...அப்பிடி என்டா என்ன? அதுட முக்கியத்துவம்என்ன?

NTFS, Fat-32, இவையெல்லாம் File Systemங்கள். எவ்வாறு மனித இனத்தில் ஒவ்வொரு இனத்தவரும் தங்களுக்கென்று தனித்தன்மையான கலாச்சாரக் கோட்பாடுகளை வைத்திருக்கின்றார்களோ அதுபோல ஒவ்வொரு இயங்குதளங்களும் (Operating System) தமக்கென்று தனித்தனியாகவோ அல்லது பொதுவானதாகவோ பைல் சிஸ்ரங்களை வைத்திருக்கின்றன.
உதாரணமாக NTFS பைல் சிஸ்ரத்தில் DOS, Windows 95, 98(First Edition) ஆகியவை வேலை செய்யாது. அதே நேரத்தில் 32GBகளுக்கு மேல் கொள்ளவு உடைய Harddiskகளை FAT, FAT32 ஆகியவை ஆதரிக்காது. மேலும் NTFSல் கணினி ஹார்ட் டிஸ்கின் இடத்தை வீனடிக்காமலும், Security settingsகளை கொடுப்பதற்கும் ஏதுவாக அமையும். இன்று அனைவராலும் Windows Familiesல் விரும்பப்படும் பைல் சிஸ்ரம் இதுவாகும்.

கேள்வி 02 :Flash memory ஒன்றை format செய்யும் போது அதன் draiver அழிந்து போய்விடுமா? flash memory சில நேரம் stop ஆகுதில்ல.. ஏதோ errormessage வருகுது? cant stop generic volume இந்த மாதிரியாக....

Flash Memoryஐ Format செய்வதால் அதனுள் இருக்கும் டேட்டா அனைதத்தும் அழிந்து விடும். சில பிளாஸ் மெமரிகளில் லொக் செய்வதற்கான யுடிலிட்டி சொப்ட்வெயர்கள் போட்டு இருப்பார்கள். அவைகளும் அழிந்து விடும். அதனால் உங்கள் பென் ரைவ்விற்கு எந்த பாதிப்பும் இல்லை.

"cant stop generic volume" என்ற பிழைச் செய்தி வருவதற்கான காரணம் பெரும்பாலும் உங்கள் கணினியில் வைரஸ் இருக்கலாம். அல்லது அந்த பிளாஸ் ரைவில் உள்ள ஏதாவது ஒரு பைலை நீங்கள் ஓப்பன் செய்திருக்கலாம்.

கேள்வி 03- எனது கணணியில் இருக்கும் modem இயங்குதா என்டு எப்பிடி பாக்கலாம்?.....எவ்வாறு மொடத்தினை install செய்வது?
மொடம் இரண்டு வகைப்படும். ஒன்று Internal இது கணினியின் மதர்போட்டில் உள்ள சிலட்டில் இணைக்க வேண்டும். மற்றது External இது கணினியின் பி்ன்புறமுள்ள COM / USB Port ல் இணைக்கலாம்.

அதற்கான ரைவரை இன்டால் செய்யலாம். பெரும்பாலான மொடங்கள் வின்டோஸ் xpயில் தானாக ரைவரை நிறுவி விடும். இதை சரிபார்க்க
START--> control Panel--> Phone and Modem என்ற பகுதிக்குச் சென்று.
அதில் Modem என்ற பகுதியில் பார்த்தீர்களானால் அதில் மொடத்தின் நிறுவப்பட்டுள்ள மொடத்தின் பெயர் தெரியும்.

அவ் மொடம் சரியாக இயங்குகின்றதா என்று சரிபார்க்க, அதிலுள்ள Properties என்ற பட்டினை கிளிக் செய்யவும். அதில் உள்ள diagnostics என்ற பகுதியில் Query Modem என்ற பட்டினை கிளிக் செய்தால் Modem Information என்ற பகுதியில் உங்கள் மொடத்தினைப் பற்றிய தகவல்கள் தெரியும். உங்கள் மொடம் வேலை செய்யவில்லை என்றால் பிழைச் செய்தி ஒரு dialog boxல் தெரியும்.


Monday, February 18, 2008

அதிதுல்லிய டிவிடி: தோஷிபா நிறுத்த முடிவு?

அதிதுல்லிய டிவிடி: தோஷிபா நிறுத்த முடிவு?
மின்னணு பொருள் தயாரிப்பில் சிறந்து விளங்கி வரும் ஜப்பான் நிறுவனமான தோஷிபா, தனது அதிதுல்லிய டிவிடி உற்பத்தியை விரைவில் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனமான சோனி, அடுத்த தலைமுறை தொழில்நுட்பமான புளு-ரே டிஸ்க் (Blu-Ray) தயாரிப்பில் இறங்கியதை தொடர்ந்து, தோஷிபாவும் அந்த வகை டிஸ்க்குகளை தயாரிக்க முடிவு செய்துள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், தனது கடைகளில், அதிதுல்லிய டிவிடிக்கள் (High Definition DVD) இனி விற்பனை செய்யப்படாது என தெரிவித்து உள்ளதை தொடர்ந்து, தோஷிபா நிறுவனம் இந்த திடீர் முடிவை எடுத்ததாகவும் சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிளேயர் மற்றும் டிஸ்க் துறையில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதில், கடந்த 1980 முதல் சோனி, தோஷிபா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.


புளு-டிஸ்க் தயாரிப்பில் சோனி சமீபத்தில் இறங்கியுள்ளதை தொடர்ந்து, தோஷிபாவும் அந்த வகை டிஸ்க் தயாரிப்பில் இறங்க உள்ளது. இது இரு நிறுவனங்களுக்கு இடையேயான தொழில் போட்டியை மேலும் அதிகரிக்கும் என இத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.

புளு-டிஸ்க் ஒரு கண்ணோட்டம்: முதலில் சிடி எனப்படும் காம்பேக்ட் டிஸ்ட் (Compact Disc) தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அதை விட மேம்படுத்தப்பட்ட டிவிடி எனப்படும் டிஜிட்டல் வெர்சடைல் டிஸ்க் (Digital Versatile Disc) அறிமுகமானது.

அதிதுல்லியமாக திரைப்படங்களை கண்டுகளிக்க டிவிடி தொழில்நுட்பத்தை சிறிது மேம்படுத்து அதிதுல்லிய டிவிடி சந்தைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இதை விட அதிக தகவல்களை சேமித்து வைக்க கூடிய புளு-ரே டிஸ்க் மேலை நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
நன்றி :http://tamil.in.msn.com/infotech/news

Friday, September 7, 2007

கணினி கிறுக்கன்

தங்களுக்கு ஏற்படும் கணினி தொடர்பான சந்தேகங்களை பற்றிய கேள்விகளை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் இல்லது பின்னுட்டத்தில் சேர்கவும். நான் அவற்றை இலவசமாக தீர்த்து வைக்கத் தயாராக உள்ளேன்.slwaran@gmail.com

Wednesday, September 5, 2007

கணினி வன்பொருள் திருத்துநர்-பகுதி-2

வவுனியா கோவில்குளம் -சண்முகா கொம்பியூட்ர்ஸ்சினால் வெளியிடப்படும் கணினி வன்பொருள் திருத்துநர்-தொடரின் பாகம் இரண்டு வெளிவந்துள்ளது. இதைப்படிக்க கீழ்கண்ட தொடர்பை சொடுக்கவும்.

http://www.esnips.com/doc/3e14cc62-8549-4e7a-ad8a-ea343b4fb8f1/Module-1.1-Casing

கணினி பயி்ல்வோம் புதுமைகள் செய்வோம்.

Saturday, September 1, 2007

கணினி வன்பொருள் திருத்துநர் தொடர்-1

இவ்வலைப்பதிவில் கணினி வன்பொருள் திருத்துநர் பற்றிய கட்டுரைத் தொடர் ஒன்றை வெளியிட உள்ளேன். உங்களின் கருத்துக்களையும் ஆக்கபூர்வமான ஆக்கங்களையும் தந்துதவுங்கள்.-நன்றி

எனது ஏனைய வளைப்பதிவுகள்
http://shanmugha.blogspot.com/
http://sivankovil.blogspot.com/
http://vavuniyatamil.blogspot.com/
http://itvav.blogspot.com/